Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? 1 கப் தயிர் இருந்தா.. 10 நிமிடத்தில் இத செய்யுங்க...
Summer Special Dahi Tadka Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் மதியம் என்ன சமையல் செய்வது என்று முடிவு செய்வதே ஒரு பெரிய வேலையாக இருக்கும். ஏனெனில் கோடையில் சமையலறையில் இருந்து நீண்ட நேரம் சமைக்கவும் பிடிக்காது, அதே போல் காரசாரமாக சாப்பிடவும் பிடிக்காது.
இப்படிப்பட்ட சூழலில் கொளுத்தும் கோடை வெயிலின் போது தயிரை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அதுவும் தயிரை வெறுமனே உணவில் கலந்து சாப்பிடாமல், அந்த தயிரைக் கொண்டு சாதத்திற்கு ஏற்றவாறு அருமையான பல சைடு டிஷ் ரெசிபிக்களை செய்யலாம்.

அதில் ஒன்று தான் தஹி தட்கா. இந்த தஹி தட்கா சூடான சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த தஹி தட்கா 5 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு தஹி தட்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஹி தட்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* தயிர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா,
மஞ்சள் தூள், கசூரி மெத்தி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
கிளறி, 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மசாலா நன்கு குளிர்ந்த பின், அதில் 1 கப் தயிரை நன்கு கலந்து விட்டு
சேர்த்து கிளறினால், சுவையான தஹி தட்கா தயார்.



Click it and Unblock the Notifications
