Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்..
Curd Brinjal Gravy Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், காரசாரமாக சாப்பிட பிடிக்காது. உணவில் தயிரை அதிகம் சேர்த்துக் கொண்டால், உடலும் குளிர்ச்சியாக, கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும். அதுவும் தயிரை வெறுமனே சாதத்துடன் சாப்பிடுவதற்கு பதிலாக, அந்த தயிரைக் கொண்டு செய்யக்கூடிய ரெசிபிக்களை தயாரித்து சாப்பிடலாம்.
அப்படி தயிரையும், கத்திரிக்காயையும் கொண்டு ஒரு அருமையான தயிர் கத்திரிக்காய் கிரேவியை செய்யலாம். இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சொல்லப்போனால் இது ஒரு மிகச்சிறந்த கோடைக்கால ரெசிபியும் கூட.

உங்களுக்கு தயிர் கத்திரிக்காயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் கத்திரிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* பெரிய கத்திரிக்காய் - 2
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கெட்டித் தயிர் - 400 கிராம்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் துள் - 1 சிட்டிகை
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைப்கேற்ப
செய்முறை:
* முதலில் பெரிய கத்திரிக்காயை எடுத்து, அதை வட்டத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளை எடுத்து,
அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 3 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்,
1 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு
மசாலா கத்திரிக்காயுடன் ஒன்று சேர பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* அதன் பின் கெட்டி தயிரை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி பரப்பி, ஊற வைத்துள்ள கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
தூவி, மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி இறக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான கிண்ணத்தில் சிறிது ப்ரை செய்த கத்திரிக்காய்
துண்டுகளை வைத்து, அதன் மேல் அடித்து வைத்துள்ள தயிரை மேலே ஊற்றி
பரப்ப வேண்டும்.
* அதன் பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, லேசாக
கிளறி விட்டு, மேலே மீதமுள்ள ப்ரை செய்த கத்திரிக்காய் துண்டுகளை
வைத்தால், சுவையான தயிர் கத்திரிக்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications