சைனீஸ் ஸ்பெஷல்: சீசுவான் சில்லி பன்னீர்

Posted By:
Subscribe to Boldsky

சைனீஸ் ரெசிபிக்கள் அனைத்துமே வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமின்றி அந்த ரெசிபிக்களின் பெயர்கள் அனைத்தும் வாயில் நுழையாததாகவே இருக்கும். அப்படிப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு சைனீஸ் ரெசிபி தான் சீசுவான சில்லி பன்னீர்.

இந்த சில்லி பன்னீர் ரெசிபியானது மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் சீசுவான் சில்லி பன்னீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Schezwan Chilli Paneer Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1/4 கப்

குடைமிளகாய் - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

சீசுவான் சாஸ் - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

மைதா - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

சீசுவான் சாஸ் செய்வதற்கு...

வரமிளகாய் - 30

பூண்டு - 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீசுவான் சாஸ் செய்யும் முறை:

முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீசுவான் சில்லி பன்னீர் செய்யும் முறை:

முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின், அதில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பன்னீர் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Schezwan Chilli Paneer Recipe

Do you know how to prepare Chinese special schezwan chilli paneer? Here is the recipe. Take a look...
Story first published: Monday, December 8, 2014, 16:38 [IST]
Subscribe Newsletter