ஈஸியான... கோபி மஞ்சூரியன் ரெசிபி

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு கோபி மஞ்சூரியன் ரொம்ப பிடிக்குமா? அதை எப்படி வீட்டில் செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியாக கோபி மஞ்சூரியனை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து மாலை வேளையில் மழை வரும் போது வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

சரி, இப்போது அந்த கோபி மஞ்சூரியனின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Quick & Easy Gobi Manchurian Recipe

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1/2 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மாவிற்கு...

மைதா - 5 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

தண்ணீர் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்

சாஸ் செய்வதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2-3 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 3 பெரிய பற்கள் (பொடியாக நறுக்கியது)

தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 4 டீஸ்பூன்

வெள்ளை வினிகர் - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு நாண்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் கெட்சப், சில்லி சாஸ் சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை கிளறி விட வேண்டும்.

பின் அதில் சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி, பின் 2 டீஸ்பூன் சோள மாவை 4 டேபிள் ஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து, வாணலியில் ஊற்றி, 1-2 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை கலந்து வைத்துள்ள மைதா கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு 3-4 நிமிடம் குறைவான தீயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தனியாக செய்து வைத்துள்ள சாஸை ஊற்றி, அதில் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், கோபி மஞ்சூரியன் ரெடி!!!

English summary

Quick & Easy Gobi Manchurian Recipe

Here we have a healthier, easy and quick recipe for gobi manchurian which you can try out in your kitchen. Get set and read on.
Story first published: Monday, September 8, 2014, 17:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter