Latest Updates
-
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆரோக்கியத்தை தரும் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ்
கொளுத்தும் வெயிலால் உடலின் வெப்பநிலையானது அதிகரித்து, சூடு பிடிக்க ஆரம்பித்து, மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே வெயிலின் தாக்கம் தெரியாமல் உடல் குளிர்ச்சியாக இருக்க, காலையில் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் குடியுங்கள்.
இதனால் வெள்ளரிக்காய் உடலின் வெப்பத்தை தணிக்கவும், இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்ற நோய்கள் வராமலும் தடுக்கும். இங்கு வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி - 1 இன்ச்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் பிளெண்டரில் வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, கருப்பு உப்பு, சர்க்கரை மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
