For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொறுமொறுப்பான ரவா வடை

By Maha
|

எப்போதும் உளுந்து வடை, பருப்பு வடை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும் ரவை கொண்டு செய்யப்படும் வடையை செய்து சாப்பிடுங்கள். இந்த ரவா வடையானது 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஈஸியான ஸ்நாக்ஸ் ரெசிபி. மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த ரவா வடை/ரவை வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Crispy Sooji Vada Recipe

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5-6 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, பின் 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, வடை பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா வடை ரெடி!!!

English summary

Crispy Sooji Vada Recipe

Sooji vada is one of the best to try out this evening snack. Here is how you prepare this delicious vegetarian recipe. 
Story first published: Friday, September 26, 2014, 15:58 [IST]
Desktop Bottom Promotion