For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசலைக்கீரை கட்லெட் ரெசிபி

By Maha
|

இதுவரை பசலைக்கீரை கொண்டு எத்தனையோ ரெசிபிக்களை பார்த்திருப்போம். ஆனால் கட்லெட் செய்வது பற்றி பார்த்திருக்கமாட்டோம். ஆகவே இப்போது மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பசலைக்கீரை கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த ரெசிபியானது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும். மேலும் பசலைக்கீரை சாப்பிட குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Spinach Cutlet Recipe

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 2 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
பிரட் தூள் - 2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின்னர் அதில் பசலைக்கீரை சேர்த்து, 2-3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து மற்றொரு பௌலில் கடலை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை தட்டையாக தட்டி, கடலை மாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பசலைக்கீரை கட்லெட் ரெடி!!!

English summary

Spinach Cutlet Recipe

Today, we have something special for you to try out. The spinach cutlet is one of the most loved veggies in the kids section because of the bright green colour it emits when cooked. Here is the spinach cutlet recipe.
Story first published: Friday, December 13, 2013, 17:29 [IST]
Desktop Bottom Promotion