Latest Updates
-
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க..
இட்லி, தோசைக்கு ஒரு டைம் இந்த மாதிரி வெங்காய சட்னியை ட்ரை பண்ணுங்க.. அடிக்கடி செய்வீங்க..
Small Onion Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டு ஒருமுறை இந்த ஸ்டைலில் சட்னியை செய்யுங்கள்.
மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த வெங்காய சட்னியை நீங்கள் அடிக்கடி செய்ய வேண்டியிருக்கும். அந்த அளவில் இந்த சட்னி வீட்டில் உள்ளோருக்கு பிடித்தவாறு இருக்கும்.

உங்களுக்கு சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7 பல்
* வரமிளகாய் - 10
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயத்தை சாப்பரில் போட்டு நன்கு பொடியாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெந்தயம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, வரமிளகாய், சீரகம் மற்றும் புளி சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள்
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, பின்
2 கப் நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சின்ன வெங்காய சட்னி
தயார்.
Image Courtesy: Jeyashri's Kitchen



Click it and Unblock the Notifications