வெங்காயம், பூண்டு, தேங்காய்-ன்னு எதுவும் சேர்க்காமலே கார சட்னி செய்யலாம்.. எப்படி செய்றது-ன்னு பாருங்களேன்...

Posted By:

No Onion No Garlic No Coconut Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய வெங்காயம், பூண்டு, தேங்காய்-ன்னு எதுவுமே இல்லையா? கவலைப்படாதீர்கள். இந்த பொருட்கள் எதுவும் இல்லாமலேயே அருமையான சுவையில் ஒரு சட்னியை செய்யலாம். அது தான் தக்காளி கார சட்னி.

இந்த சட்னிக்கு தக்காளியும், வரமிளகாயும் இருந்தால் போதும். 10 நிமிடத்தில் சட்னியை செய்துவிடலாம். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசை, கோதுமை தோசை என அனைத்துடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். ஆபீஸ் செல்பவர்களுக்கு காலையில் டக்கென்று செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

Simple Chutney How To Make a No Onion No Garlic No Coconut Chutney Recipe

உங்களுக்கு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர்ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 9, 2024, 7:58 [IST]
Desktop Bottom Promotion