Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கறி சுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Senaikilangu Kari Varuval Recipe In Tamil: புரட்டாசி மாதத்தில் உங்கள் வீட்டில் அசைவ உணவுகளை செய்யமாட்டீர்களானால், அப்போது அசைவ உணவையே தோற்கடிக்கும் வகையில் உள்ள சைவ உணவுகளை சமைத்து சாப்பிடலாம். அதுவும் உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு கறி சுவையில் சூப்பரான வறுவலை செய்து சாப்பிடுங்கள்.
இந்த சேனைக்கிழங்கு கறி வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஒருமுறை இதை வீட்டில் செய்தால் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கறி சுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 2 சில்லு
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* வெங்காயம் - 1
* வரமிளகாய் - 4
* தண்ணீர் - சிறிது
வறுவலுக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சேனைக்கிழங்கை வேக வைக்கும் அளவில் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும்
1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி, சேனைக்கிழங்கை சேர்த்து, அத்துடன்
1 ஆணியை போட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை
வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சோம்பு, மிளகு, தேங்காய், பூண்டு, இஞ்சி,
நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொண்டு,
பின் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து
ப்ரை செய்து எடுத்துக கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த
மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு
கிளறி, மொறுமொறுவென்று வரும் வரை ப்ரை செய்து இறக்கினால், சுவையான
சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Image Courtesy: Yummy Tummy Aarthi



Click it and Unblock the Notifications











