Latest Updates
-
ஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இந்த அறிகுறிகளை செக் பண்ணி பாருங்க...! -
மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்? | PhonePe Biometric Pay How to Use -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Semiya Adai Recipe In Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியா உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவைக் கொண்டு உப்புமா செய்யாமல், அடை செய்து சாப்பிடுங்கள்.
இந்த அடை வழக்கமாக சாப்பிடும் அடையை விட வித்தியாசமான சுவையில், அதே வேளையில் விரும்பி சாப்பிடக்கூடியவாறு மொறுமொறுவென்றும் இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு இது சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சேமியான அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த சேமியா - 1 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* அரிசி மாவு - 1 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுரைக்காய் - 1/2 கப் (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
* கடுகு - சிறிது
* வெள்ளை எள்ளு - சிறிது
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வறுத்த சேமியாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில்
கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை
வடிகட்டிவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சேமியாவை எடுத்து, அத்துடன்
அரிசி மாவு, ரவை மற்றும் சுவைக்கேற்ப உப்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவி வைத்துள்ள சுரைக்காய் மற்றும் கேரட்டை
சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை மற்றும் துருவிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம், பெருங்காயத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி
வைத்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதிகமாக
நீரை ஊற்றி விட வேண்டாம். அதேப் போல் மிகவும் கெட்டியாகவும் கலந்து
கொள்ள வேண்டாம். மிதமான அளவில் கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சிறிது கடுகு, வெள்ளை எள்ளு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரப்பி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிறிது நெய்யை தடவி திருப்பிப் போட்டு,
பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சேமியா
அடை தயார்.



Click it and Unblock the Notifications











