Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புரட்டாசி ஸ்பெஷல் சைவ கறிக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
Saiva Kari Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் நிறைய வீடுகளில் அசைவ உணவுகளை சமைக்கமாட்டார்கள். அதற்கு மாறாக அசைவ உணவின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் சைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா?
இந்த வார விடுமுறையில் வாய்க்கு ருசியான, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்திற்கும் ஏற்றவாறான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கருணைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அருமையான சுவையில் சைவ கறிக்குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். இதை செய்தால், தெருவே மணக்கும்.

உங்களுக்கு சைவ கறிக்குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ கறிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப் (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7-8
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
ஊற வைப்பதற்கு....
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் இட்லி பாத்திரத்தில் கருணைக்கிழங்கை இரண்டு பெரிய
துண்டுகளாக்கி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி பாத்திர மூடியைத்
திறந்து, கருணைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சற்று
பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கிழங்குடன் மிளகாய் தூள், உப்பு, குழம்பு மிளகாய் தூள்,
புளித்த தயிரை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், முந்திரி, சோம்பு,
தக்காளி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள கிழங்கை சேர்த்து, நன்கு ப்ரை செய்து
தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா இலைகளை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மட்டன் மசாலா,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் நன்கு
பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி, கரம் மசாலா சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள
கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சைவ கறிக்குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











