ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப் செய்து கொடுங்கள்.

Posted By:

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது ஹரா பரா கபாப் செய்து கொடுங்கள்.

Restaurant Style Hara Bhara Kebab Recipe In Tamil

உங்களுக்கு ஹரா பரா கபாப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹரா பரா கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பசலைக்கீரை - 2 கப்

* கொத்தமல்லி - 1/4 கப்

* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)

* பச்சை பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)

* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)

* சோம்பு - 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

* சாட் மசாலா - 1 டீஸ்பூன்

* கடலை மாவு - 1/4 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

* கோதுமை பிரட் தூள் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் பிளெண்டரில் பசலைக்கீரை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, வேக வைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, அரைத்த கலவை, உப்பு, மாங்காய் தூள், கடலை மாவு, சாட் மசாலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் சேர்த்து நன்கு இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு பிசைந்து வைத்துள்ள கலவையை சரிசம அளவில் உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுத்தால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப் தயார்.

Image Coutesy: firstcry

[ of 5 - Users]
Desktop Bottom Promotion