Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
1 கப் பச்சரிசியும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
Raw Rice Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு கப் பச்சரிசியும், 2 உருளைக்கிழங்கும் இருந்தால் அட்டகாசமான சுவையில் போண்டாவை செய்து கொடுங்கள்.
இந்த போண்டா நீங்கள் வழக்கமாக சாப்பிடும் போண்டாவின் சுவையில் இல்லாமல், சற்று வித்தியாசமாகவும், அதே வேளையில் அற்புதமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த போண்டா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி போண்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சோடா உப்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவி, 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் ஊற வைத்த பச்சரிசியை நீரில் மீண்டும் ஒருமுறை கழுவி, மிக்சர்
ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும். முக்கியமாக அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம்.
* பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து, அதை துருவிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை எடுத்து, அத்துடன்
துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின் அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி,
கறிவேப்பிலை, வெங்காயம், சோடா உப்பு மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். மாவானது கெட்டியாக
இருக்க வேண்டும். மிகவும் நீராக இருந்தால், பச்சரிசி மாவை சிறிது
சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கையில்
எடுத்து, அதை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான பச்சரிசி போண்டா தயார்.
Image Courtesy: Jeyashri's Kitchen



Click it and Unblock the Notifications
