Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
தினமும் இட்லி தோசை செய்யாம.. 1 கப் ரவையும், 1 கேரட்டும் இருந்தா இப்படி செய்யுங்க..
Rava Kara Kuzhi Paniyaram Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா?
அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழி பணியாரம் செய்யுங்கள். இந்த பணியாரமானது காலையில் வேகமாக செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ரவா கார குழி பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா கார குழி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோடா உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் தயிர், சோடா உப்பு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது
நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதிக நீரை ஊற்றிவிட
வேண்டாம். அளவாக ஊற்றி கிளறிக் கொள்ளுங்கள். பின் அதை மூடி வைத்து
5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, மஞ்சள் தூளை சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்துள்ள ரவையை கிளறி, மிகவும் கெட்டியாக இருந்தால்,
சிறிது நீரை ஊற்றி கிளறிக் கொள்ள வேண்டும். பின் தாளித்ததை ஊற்றி
நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
குழிகளில் எண்ணெய் ஊற்றி, ரவை கலவையை ஊற்றி 4 நிமிடம் மூடி வைத்து வேக
வைத்து, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா
கார குழி பணியாரம் தயார்.
Image Courtesy: Jeyashri's Kitchen



Click it and Unblock the Notifications