Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Ramzan Eid 2026 Special Telangana Style Mutton Curry Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் பலவிதமான மட்டன் ரெசிபிக்களை செய்வீர்களா? இந்த ரம்ஜான் பண்டிகையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலான மட்டன் ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் மட்டன் பிரியாணியை செய்து, சைடு டிஷ்ஷாக காரசாரமான தெலுங்கானா ஸ்டைல் மட்டன் கறியை செய்யுங்கள். இது அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.
உங்களுக்கு தெலுங்கானா ஸ்டைல் மட்டன் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தெலுங்கானா ஸ்டைல் மட்டன் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மட்டன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
மசாலா அரைப்பதற்கு...
* கசகசா - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 4-5
* பட்டை - 2-3
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மட்டன் துண்டுகளை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட்டு,
தட்டு கொண்டு மூடி வைத்து, நீர் விட்டு வரும் வரை மட்டனை வேக வைக்க
வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் கசகசா, சீரகம், மல்லி விதை, துருவிய
தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் மட்டனுடன் 2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பை
சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, ஜாரில் 1 கப் நீரை
சேர்த்து அலசி ஊற்றி, மட்டனை நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து, 3-4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் உயர்
தீயில் 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான தெலுங்கானா ஸ்டைல் மட்டன் கறி தயார்.



Click it and Unblock the Notifications











