Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Ramzan Eid 2026 Special Afghani Mutton Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகை என்றாலே முதலில் மட்டன் பிரியாணி தான் நினைவிற்கு வரும். அந்த ரம்ஜான் பண்டிகை வரப்போகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக மட்டனை சமைக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் மட்டன் பிரியாணியை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக ஆப்கானி மட்டனை செய்யுங்கள். இந்த ஆப்கானி மட்டன் நன்கு க்ரீமியாகவும், ருசியாகவும் இருக்கும். இது பிரியாணிக்கு மட்டுமின்றி, சப்பாத்தி, புலாவ், நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி மட்டன் குழம்பு மற்றும் கிரேவியை செய்யாமல், ஒருமுறை இந்த ஆப்கானி மட்டனை செய்தால், பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு ஆப்கானி மட்டன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆப்கானி மட்டன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கிலோ (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* எலும்பில்லாத மட்டன் - 800 கிராம்
* தயிர் - 1/2 கப்
* சீரகத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - 3 கப்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* உலர்ந்த வெந்தயக்கீரை - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு 8 நிமிடம் கிளறி விட்டு
வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்துக் கொண்டு, அத்துடன் சீரகத்
தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இந்த தயிர் கலவையை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும்
வரை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 3 கப் சுடுநீரை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 40-45 நிமிடம்
மட்டனை வேக வைக்க வேண்டும்.
* 45 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மட்டனை கிளறி, மூடி வைத்து
1/4 கப் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, உலர்ந்த கசூரி மெத்தி மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஆப்கானி மட்டன்
தயார்.



Click it and Unblock the Notifications