Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ரம்ஜான் ஸ்பெஷல்: தஞ்சாவூர் ஸ்டைல் மட்டன் குழம்பு
ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது. இந்த ரம்ஜான் பண்டிகையன்று ஒரு ஸ்பெஷலான மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், நம்ம தஞ்சாவூர் ஸ்டைல் மட்டன் குழம்பை செய்யுங்கள்.
ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது. இந்த ரம்ஜான் பண்டிகையன்று ஒரு ஸ்பெஷலான மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், நம்ம தஞ்சாவூர் ஸ்டைல் மட்டன் குழம்பை செய்யுங்கள். இது பிரியாணி, வெள்ளை சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்டைல் மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தஞ்சாவூர் ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5-6
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 1 இன்ச் துண்டு
* அன்னாசிப் பூ - 1
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனை குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், நறுக்கிய 1 வெங்காயம், நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, 2 டம்ளர் நீரை ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மல்லித் தூளையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தேங்காய் மற்றும் சிறிது சோம்பு விதைகளை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, எஞ்சியுள்ள ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இந்நிலையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கொதித்ததும், மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வரும் போது, அடுப்பை அணைத்து, குழம்பின் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தஞ்சாவூர் மட்டன் குழம்பு தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
