Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
4 கப் ராகி மாவும், 2 கைப்பிடி முருங்கைக்கீரையும் வெச்சு.. காலையில் இந்த சத்தான டிபனை செய்யுங்க..
Ragi Murungai Keerai Adai Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வீட்டில் ராகி மாவு உள்ளதா? அதே சமயம் முருங்கைக்கீரையும் உள்ளதா? அப்படியானால் ராகி மாவையும், முருங்கைக்கீரையையும் கொண்டு அருமையான சுவையில் அடை செய்யுங்கள்.
இந்த ராகி முருங்கைக்கீரை அடை சைடு டிஷ் எதுவும் இல்லாமல், வெறுமனே சாப்பிடவும் நன்றாக இருக்கும் ஒருவேளை சைடு டிஷ் வேண்டுமானால், தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த அடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ராகி முருங்கைக்கீரை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி முருங்கைக்கீரை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 6
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ராகி மாவு - 4 கப்
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், சோம்பு மற்றும் சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அதில் அரைத்து
வைத்துள்ள மிளகாய் விழுது, தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பொடியாக
நறுக்கிய வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து கைகளால் கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அடை மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பின் சிறிது அடை மாவை எடுத்து உருட்டி, அதை தட்டையாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ள அடையைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.



Click it and Unblock the Notifications





