Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
1 கப் ராகி இருந்தா போதும்... குழந்தைகளுக்கு பிடிச்ச சத்தான மற்றும் சுவையான ஸ்நாக் செய்யலாம்...!
Ragi bonda recipe in Tamil: எல்லாருக்கும் ஸ்னாக்ஸ் சாப்பிட ரொம்ப பிடிக்கும். பெரியவர்களும் கூட விரும்பி சாப்பிடுவாங்க. ஆனால் குழந்தைகளோட ஆரோக்கியம், பெரியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் போன்றவற்றை யோசித்து நாம் ஸ்னாக்ஸ் வகைகளை குறைப்போம்.
ஆனால் நாம் ஆரோக்கியமாக வீட்டிலேயே செய்யும் ஸ்னாக்ஸ் வகைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றதாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் தான் ராகி போண்டா. வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
- ராகி மாவு - 1 கப்
- பொட்டுக் கடலை - 1 கப்
- கொத்தமல்லி - 2 கைப்பிடி அளவு
- புதினா - 2 கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய் - 2
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- இஞ்சி - சிறிதளவு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 10 அல்லது 12 பல்
- சீரகத்தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் - 2
- கருவேப்பிலை - 1 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு (பொரிக்க)
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தமாக மண் இல்லாமல் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கருவேப்பிலையை சுத்தமாக கழுவி சிறிது சிறிதாக கிள்ளி வைத்து கொள்ளவும்.
- ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து பொடியாக அரைத்து சலித்து கொள்ளவும்.
- தேவைப்பட்டால் மிஞ்சியவற்றை மீண்டும் அரைத்து சலித்து ½ கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.
- அதே போல் ஒரு கப் ராகி மாவை சல்லடையில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும்.
- பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்து எடுத்த ராகி மாவு, பொட்டு கடலை மாவு, மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- அதனுடன் சீரகத் தூள், மிளகு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் சேர்த்து வேக வைக்கவும்.
- நன்றாக வெந்ததும் தனியே எடுத்து எண்ணையை வடிய வைத்து ஆற விடவும். இதே போல் மீதம் இருக்கும் மாவையும் பொரித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான ராகி போண்டா ரெடி!



Click it and Unblock the Notifications











