Just In
Don't Miss
- News
ஓபிஎஸ் க்கு நியாயம் கேட்கும் முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள்! இன உணர்வுடன் திரளுமாறு போஸ்டர்கள்!
- Movies
பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா?
- Finance
Gold price: தங்கம் வாங்க இது சரியான நாளா.. இன்று விலை எப்படியிருக்கு?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றையும் பொருத்தினால் கார் வேற லெவல்ல மாறிடும்!
- Technology
Vivo V25 இல்ல Vivo V25 Pro-வை வாங்கலாம்னு வெயிட் பண்றீங்களா? டைம் வேஸ்ட்!?
- Sports
"பாரபட்சமே கிடையாது.. ஒரே அடிதான்".. இந்தியாவுக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. மிகவும் பலம்தான் போல...!
- Travel
என்ன? உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் இந்தியாவில் தான் உள்ளதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Punjabi Aloo Masala Recipe : பஞ்சாபி ஆலு மசாலா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சற்று ஸ்பெஷலாகவும், வழக்கமான சுவையில் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு பஞ்சாபி ஆலு மசாலா செய்யுங்கள். இந்த ஆலு மசாலா செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.
உங்களுக்கு பஞ்சாபி ஆலு மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி ஆலு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஓமம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கரம் மசாலா, மாங்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பஞ்சாபி ஆலு மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi