Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Pudina Chutney Recipe : புதினா சட்னி
புதினா சட்னி இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த சட்னி பஜ்ஜி, போண்டாவுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள புதினா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு புதினாவை சட்னியாக செய்து அடிக்கடி சாப்பிடலாம். புதினா சட்னி இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த சட்னி பஜ்ஜி, போண்டாவுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். நீங்கள் செய்யும் புதினா சட்னி சுவையாகவே இருக்காதா? அப்படியானால் கீழே புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8-10
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 2
* புதினா - 2 கப்
* புளி - 1 துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புதினாவை சேர்த்து, அது சுருங்கும் வரை சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காய், புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், புதினா சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
