Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு
இன்று மதியம் உங்கள் வீட்டில் புளிக்குழம்பு செய்துள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த புடலங்காயைக் கொண்டு கூட்டு செய்யுங்கள்.
இன்று மதியம் உங்கள் வீட்டில் புளிக்குழம்பு செய்துள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த புடலங்காயைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த புடலங்காய் கூட்டு புளிக்குழம்பிற்கு ஒரு சிறந்த சைடு டிஷ்ஷாக இருப்பதோடு, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த கூட்டு செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக இது பேச்சுலர்கள் சமைக்க ஒரு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

உங்களுக்கு புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* புடலங்காய் - 1 1/2 கப் (நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் நறுக்கிய புடலங்காய் மற்றும் பாசிப் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் சீரகத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் உள்ள புடலங்காயில் போட்டு, சிறிது நீரை ஊற்ற வேண்டும்.
* பின் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளற வேண்டும்.
* இப்போது சுவையான புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications


















