Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சிம்பிளான மற்றும் சுவையான... பட்டாணி குருமா
சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்வதாக இருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பட்டாணியைக் கொண்டு சுவையான குருமாவை செய்யுங்கள்.
தினமும் ஒவ்வொரு வேளை சமைக்கும் போதும், என்ன சமைப்பது என்றே தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக தான் தமிழ் போல்ட் ஸ்கை தினமும் உங்களுக்கு ஐடியா கொடுக்கும் வகையில் சில ரெசிபிக்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்வதாக இருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பட்டாணியைக் கொண்டு சுவையான குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பட்டாணி குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பட்டாணி - 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3-4
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பால் - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஊற வைத்த பட்டாணியை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை போட்டு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு பொடியை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பட்டாணி குருமா தயார்.
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications











