1 கப் பாசிப்பருப்பு வெச்சு ஒருமுறை இப்படி ரிப்பன் பக்கோடா செய்யுங்க... ஒரு வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்...

Posted By:

Moong Dal Ribbon Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? தினமும் மாலையில் குழந்தைகளுக்கு மொறுமொறுவென்று செய்து தர சிரமமாக உள்ளதா? அப்படியானால் ஒருமுறை ஒரு கப் பாசிப்பருப்பு வைத்து ரிப்பன் பக்கோடாவை செய்தால், ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

மேலும் இந்த பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நீங்கள் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்குவதைத் தவிர்க்க நினைத்தால், இப்படி ரிப்பன் பக்கோடாவை செய்து வைத்துக் கொள்வதன் மூலம் பல நாட்கள் வைத்து சாப்பிடலாம்.

Pasi Paruppu Ribbon Pakoda How To Make a Moong Dal Ribbon Pakoda Recipe

உங்களுக்கு பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* பச்சரிசி மாவு - 4 கப்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, அதில் 3 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை கரண்டியால் நன்கு மென்மையாக மசித்து விட வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் எள்ளு விதைகள், சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் சேர்த்து கைகளால் ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்கு பிசைய வேண்டும்.
* ஒருவேளை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரைத் தெளித்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், மிதமான தீயில் வைத்துவிட்டு, முறுக்கு பிழியும் உலக்கில் ரிப்பன் பக்கோடா அச்சை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நிரப்பி, பின் நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.
* பிழிந்த உடனே பக்கோடாவை திருப்பிப் போடாமல் 1 நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பிழிந்து பொரித்து எடுத்தால் சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 10, 2024, 18:01 [IST]
Desktop Bottom Promotion