Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
சப்பாத்திக்கு ஒருமுறை பச்சை பயறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அட்டகாசமாக இருக்கும்...
Pachai Payaru Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளைக் கொண்டு சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா?
அப்படியானால் அந்த பச்சை பயறைக் கொண்டு ஒருமுறை கிரேவி செய்யுங்கள். இந்த பச்சை பயறு கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது சத்தான ரெசிபியும் கூட. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை
சேர்த்து சற்று நிறம் மாறி நல்ல வாசனை வரும் வரை வறுத்து இறக்கி,
நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும், பட்டை, கிராம்பு,
பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் பச்சை பயறு வேக தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு லேசாக மசித்து விட
வேண்டும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து அதில் பூண்டு
பற்களை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான பச்சை பயறு கிரேவி தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications