Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மணமணக்கும்.. பச்சை மொச்சை கத்திரிக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Pachai Mochai Kathirikai Kuzhambu Recipe In Tamil: தற்போது பச்சை மொச்சை சீசன். இந்த சீசனில் மட்டும் தான் இந்த பச்சை மொச்சை கிடைக்கும். மற்ற காலங்களில் இதை காண முடியாது. எனவே இது கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.
அதுவும் பச்சை மொச்சையுடன் கத்திரிக்காய் சேர்த்து குழம்பு செய்யும் போது, அதன் சுவை வேற லெவலில் இருக்கும். அதுவும் உங்களுக்கு புளி சேர்க்காமல் மொச்சை குழம்பு செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இப்படி செய்யும் குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை மொச்சை கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பச்சை மொச்சை - 1/4 கிலோ
* பூண்டு - 4 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
குழம்பு தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1 சிட்டிகை
* சீரகம் - 1 சிட்டிகை
* சோம்பு - 1 சிட்டிகை
* மிளகு - 7
* கடுகு - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (தட்டியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 7 சில்லு
* சோம்பு- 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* மிளகு - 10
செய்முறை:
* முதலில் குக்கரில் பச்சை மொச்சையை போட்டு, அத்துடன் பூண்டு,
மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து, மொச்சை மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து மூடி, 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் ஒரு கைப்பிடி நறுக்கிய சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிக் கொண்டிருக்கும் பொருட்களை சிறிது
எடுத்து போட்டு, அத்துடன் நறுக்கிய தேங்காய், சோம்பு, கிராம்பு, மிளகு
மற்றும் சிறிது மொச்சையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் வதக்கி கொண்டிருக்கும் பொருட்களுடன் கத்திரிக்காயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், அதில் வேக வைத்துள்ள பச்சை
மொச்சையை மட்டும் வடிகட்டி சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி
விட வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பச்சை மொச்சை நீரை ஊற்றி கிளறி, தேவையான அளவு
நீரை ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு குழம்பை கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு
நீரை சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி, 3 நிமிடம் மூடி வைத்து
நன்கு கொதிக்க வைக்க வேடும்.
* குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அதை
இறக்கினால், சுவையான பச்சை மொச்சை கத்திரிக்காய் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











