Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
2 வெங்காயமும், 1/2 கப் தயிரும் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படியொரு கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Onion Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? இருந்தாலும் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் வெங்காயமும், தயிரும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு கிரேவி செய்யுங்கள்.
இந்த கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி 10-15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு இருப்பதால், இது வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பேச்சுலர்கள் இந்த ரெசிபியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 2
* தக்காளி - 2
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 4-5 பல்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து, அதை சதுர துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு வெங்காயத்தை எடுத்து பொடியாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, பட்டை,
கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பெரிய துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை சேர்த்து, 1/2 கப்
நீரை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போகும் வரை 3 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கப் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி, 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கிளறி, கிரேவி
பதத்திற்கு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* எண்ணெய் பிரிந்து கிரேவி சற்று கெட்டியாக தொடங்கியதும், அதில்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், வெங்காய கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











