For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்டீஸ்களுக்கு பிடித்த சிக்கன் லெக் பீஸ் மசாலா வறுவல்!

By Mayura Akilan
|

Chicken
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கன் லெக் பீஸ் மசாலாவும் ஒன்று. கையில் பிடித்து கடித்து சாப்பிட வசதியாக இருக்கும் என்பதால் போட்டி போட்டு கேட்டு சாப்பிடுவார்கள். சுவையான லெக்பீஸ் மசாலா செய்ய எளிதானது. செய்யவும் எளிதாக இருக்கும். சிக்கன் புரதம் நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் – 6 பீஸ்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்
மிளகு, சீரகப் பொடி - 2 டீ ஸ்பூன்
தயிர் - 100 மில்லி
ரீபைண்ட் ஆயில் - 3 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

லெக் வறுவல் கறி செய்முறை

முதலில் சிக்கன் லெக் துண்டுகளை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அதன் மேல் பாதி அளவு தயிர் ஊற்றி சிறிதளவு உப்பு போட்டு ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிவைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்றாக கூழாகும் வரை வதக்கவும்.

இப்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும். உப்பு இரண்டு சிட்டிகை போட்டால் போதும். ஏனெனில் சிக்கனுக்கு ஏற்கனவே உப்பு போட்டு ஊற வைத்துள்ளோம்.

எண்ணெய் பிரிந்து வரும் போது ஊறவைத்துள்ள சிக்கனைப் போட்டு கிளறவும். 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றவும், அதோடு மிதமுள்ள தயிரை போட்டு கிளறி மூடி போட்டு வேகவிடவும்.

பதினைந்து நிமிடத்தில் சிக்கன் நன்றாக வெந்து கிரேவி பதம் வந்த உடன் அதன் மீது சீரகம் மிளகு பொடி தூவி கிளறவும். எண்ணெய் மினுப்போடு சிக்கன் லெக் பீஸ் மசாலா தயாராகிவிடும். சூடான சாதத்தில் இந்த மசாலா போட்டு சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

English summary

Spicy Chicken Legs curry recipe | குட்டீஸ்களுக்கு பிடித்த சிக்கன் லெக் பீஸ் மசாலா வறுவல்!

Chicken Leg piece curry is an innovative dish. Children will like this Indian dish to eat.
Story first published: Monday, March 5, 2012, 13:22 [IST]
Desktop Bottom Promotion