Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஷாஹி மட்டன் குருமா
ரம்ஜான் வரப் போகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களின் வீடுகளிலும் மட்டன் ரெசிபிக்கள் தான் செய்வார்கள். அந்நாளன்று பலர் வித்தியாசமான மட்டன் ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன செய்வதென்று தான் தெரியாது. ஆகவே தமிழ் போல்டு ஸ்கை, உங்களுக்காக இந்த வருட ரம்ஜான் பண்டிகையன்று வித்தியாசமான சுவையில் ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது.
அந்த ரெசிபிக்கு ஷாஹி மட்டன் குருமா என்று பெயர். இந்த ரெசிபி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்யும் போதே, பசி எடுக்கும். அந்த அளவில் இதன் நறுமணம் அனைவரையும் கவரும். சரி, இப்போது அந்த ஷாஹி மட்டன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம் (எலும்பில்லாதது)
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பால் - 1 டேபிள் ஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 1 கப்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1-2 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் குங்குமப்பூவை பாலில் போட்டு, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு, அதில் தயிர், மல்லி தூள், பாதாம் பேஸ்ட், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு மணிநேரம் கழித்ததும், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு, 20 நிமிடம் மசாலா மட்டனில் ஒட்டி, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
பிறகு மிளகு தூள், கரம் மசாலா, பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து ப்ரஷ் க்ரீமை பொளலில் போட்டு அடித்துக் கொண்டு, மட்டனுடன் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பின் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, மூடி வைத்து தீயை குறைவில் வைத்து, மட்டன் வேகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். (ஒருவேளை தண்ணீர் போதவில்லையெனில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.)
இப்போது சுவையான ஷாஹி மட்டன் குருமா ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி சாதத்துடன் பரிமாறினால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
