Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
செட்டிநாடு மட்டன் குழம்பு - ரம்ஜான் ஸ்பெஷல்!
ரம்ஜான் பண்டிகை நெருங்கிவிட்டது. அனைத்து இஸ்லாமியர்களின் வீடுகளிலும் ஆளை இழுக்கும் வண்ணம் அற்புதமான சமையல் வாசனை வீசும். அதிலும் மட்டனை தான் பலரும் சமைப்பார்கள். இந்த ரம்ஜான் பண்டிகைக்கு உங்கள் வீட்டில் எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், நம் செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள்.
இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு சமையலின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து ரம்ஜானை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
மசாலா பொருட்கள்...
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
செட்டிநாடு மசாலா பொடிக்கு...
வரமிளகாய் - 6-8
மல்லி - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 5 செ.மீ
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
அன்னாசிப்பூ - 1
தேங்காய் மசாலாவிற்கு...
தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 'செட்டிநாடு மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் 15-20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, பின் இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 15-20 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications