ரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

Posted By:
Subscribe to Boldsky

இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் ரமலான் நோன்பு காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சரி, இப்போது அந்த சிக்கன் மலாய் டிக்காவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Ramadan Special: Chicken Malai Tikka

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ

வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

மலாய் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை ஏலக்காய் - 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

துருவிய சீஸ் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பின்பு பிளெண்டரில்/மிக்ஸியில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி வெண்ணெய், க்ரீம், சீரகப் பொடி, ஏலக்காய், பச்சை மிளகாய், சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி, நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும். அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும்.

இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால், சிக்கன் மலாய் டிக்கா ரெடி!!!

English summary

Ramadan Special: Chicken Malai Tikka

Prepare chicken malai tikka as one of the healthy foods for suhoor. It is the best among the Ramadan chicken recipes.
Story first published: Friday, June 26, 2015, 13:38 [IST]
Subscribe Newsletter