Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
அவல் ரோல்
மாலையில் நன்கு மொறுமொறுவென்றும், வித்தியாசமானதாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், அப்போது வீட்டில் அவல், உருளைக்கிழங்கு மற்றும் முட்டை இருந்தால், அருமையாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம். அதற்கு அவல் ரோல் என்று பெயர். இந்த அவல் ரோல் செய்வது மிகவும் எளிது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
இப்போது அந்த அவல் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவல் - 35 கிராம்
முட்டை - 1 (நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 3
மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
வேர்க்கடலை - 25 கிராம் (வறுத்தது)
மாங்காய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அவலை நன்கு நீரில் கழுவி , நீரை முற்றிலும் வடித்துவிட வேண்டும்.
அடுத்து வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் அவல், வேர்க்கடலை பொடி, மிளகாய், கொத்தமல்லி, மாங்காய் தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அந்த சமயத்தில் உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, பின் சுருட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெய் காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்தையும் செய்தால், சூப்பரான அவல் ரோல் ரெடி!!!



Click it and Unblock the Notifications