Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மட்டன் தம் பக்த் ரெசிபி
மட்டன் தம் பக்த் ரெசிபி ஒரு மொகலாய ரெசிபி. இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், மட்டனை பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவால் மூடி வேக வைப்பது தான். இது சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருந்தாலும், இதன் சுவை உண்மையிலேயே அலாதியாக இருக்கும்.
சரி, இப்போது அந்த மட்டன் தம் பக்த் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2-3
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு ஏலக்காய் - 1
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - ஃ/1 கப் (நறுக்கியது)
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், மிளகு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த பேஸ்ட்டை, கழுவி வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து , தயிர் ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு, உப்பு தூவி கிளறி, 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
மட்டனும், எண்ணெயும் தனியாக பிரியும் போது, தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி பதத்தில் பிசைந்து,
வாணலியை மூடுமாறான வட்டத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூடி வைத்துள்ள வாணலியை திறந்து, அதனை கோதுமை மாவால் மூடி, தீயை குறைவில் வைத்து, 30 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான மட்டன் தம் பக்த் ரெசிபி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications