Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி மீனை சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவை உடலுக்கு மிகவும் சிறப்பானது.
இப்போது அந்த மீன்களில் ஒன்றான மத்தி மீனை வைத்து, கேரளா ஸ்டைலில் எப்படி வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!!

மத்தி மீன் - 1/2 கிலோ
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து, கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காயந்ததும், அதில் மிளகு, சீரகம், சோம்பு போன்றவற்றை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், உப்பு சேர்த்து கிளறி, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி, 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனைப் போட்டு, பொன்னிறமாக, பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையா மத்தி மீன் வறுவல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
