சுவையான மட்டன் கடாய்

Posted By:
Subscribe to Boldsky

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து நன்கு மூக்குமுட்ட சாப்பிட நினைப்போம். அப்படி சாப்பிட நினைக்கும் போது மட்டன் கடாய் செய்து சாப்பிட்டால் உண்மையிலேயே சுவையாக இருக்கும். இங்கு அந்த மட்டன் கடாய் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

பேச்சுலர்கள் கூட விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த கடாய் மட்டனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Delectable Mutton Kadai Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

தக்காளி - 2 (நறுக்கியது)

வெங்காய பேஸ்ட் - 1/4 கப்

பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

தயிர் - 1/4 கப்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

பிரியாணி இலை - 2

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பச்சை மிளகாயை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காய பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, பின் வறுத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பும் சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, பச்சை மிளகாயை சேர்த்தால், மட்டன் கடாய் ரெடி!!!

English summary

Delectable Mutton Kadai Recipe

Mutton kadai or kadai gosht is an easy preparation and if you can use a pressure cooker then it gets cooked fast as well. Check out the recipe of mutton kadai.
Story first published: Sunday, November 23, 2014, 12:18 [IST]