For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை கறி செய்வது எப்படி?

By Sutha
|

இன்று சாப்பிட பூரி செய்யலாம் என்று நினைப்போம். ஆனால் பூரிக்குத் தொட்டுக் கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டைக் கறியை டிரை செய்து பார்க்கலாம்.

முட்டைக் கறி தயாரிப்பது எப்படி, தொடர்ந்து படியுங்கள்...

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

முட்டை - 4

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

மிளகாய் தூள் - தேவைக்கேற்ப


செய்முறை:

1. வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

3. எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

4. வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

5. இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

6. அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

7. முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

சூடான, சுவையான முட்டைக் கறி தயார். இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்டுட்டுச் சொல்லுங்க.

English summary

How to prepare tasty egg curry? | முட்டை கறி செய்வது எப்படி?

People who are fed up with Poori and potato curry can try this delicious egg curry. It takes less time to prepare. Try this recipie in your house and surprise your family.
Story first published: Thursday, December 16, 2010, 13:21 [IST]
Desktop Bottom Promotion