Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மொறுமொறு... சிக்கன் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள்:
சிக்கன் (1/2 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/4 கிலோ
முட்டை - 1
மோர் - 1 கப்
இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் மோர், இஞ்சிபூண்டு விழுது, உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.
2. பின் சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
3. பிறகு ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. பின் ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள மோர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.
5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
6. பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
7. பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.
இப்போது சுவையான மொறுமொறு சிக்கன் ஃபிங்கர்ஸ் ரெடி!!! இந்த சிக்கன் ஃபிங்கர்ஸ்-ஐ சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications