For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்தமல்லி சிக்கன் கிரேவி

By Neha Mathur
|

எப்போதுமே விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் என்றால் அது கொத்தமல்லி தான். பொதுவாக கொத்தமல்லி வாங்கினால், அதனை அலங்கரிக்கப் பயன்படுத்துவோம் அல்லது சட்னி செய்து சாப்பிடுவோம். ஆனால் அப்படி சட்னி செய்வதற்கு பதிலாக, விடுமுறை நாட்களில் சிக்கன் சமைக்க நினைத்தால், சிக்கன் மறறும் கொத்தமல்லியைப் பயன்படுத்தி ஒரு கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும் விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களை அசத்த நினைத்தால், அப்போது கொத்தமல்லி சிக்கன் கிரேவியை செய்து கொடுத்தால், நல்ல பெயரை வாங்கலாம்.

சரி, இப்போது அந்த கொத்தமல்லி சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு...

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

கிரேவிக்கு...

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 1/2 கப் (நறுக்கியது)

மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 2 கப்

பச்சை மிளகாய் - 2-3

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

செய்முறை

* முதலில் சிக்கன் நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி, 4-8 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் மல்லி தூள் சேர்த்து கிளறி, பின் ஊற வைத்துள்ள சிக்கனைப் போட வேண்டும்.

செய்முறை

செய்முறை

* சிக்கனைப் போட்ட பின், தீயை உயர்த்தி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும். குறிப்பாக மறக்காமல் அவ்வப்போது பிரட்டி விடுங்கள்.

* அடுத்து மிக்ஸியில் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* இறுதியில் அரைத்து வைத்துள்ளதை வாணலியில் ஊற்றி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10-12 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி சிக்கன் கிரேவி ரெடி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chicken In Coriander Gravy

Chicken In Coriander Gravy is a delicious and tangy recipe. Here is the coriander chicken gravy recipe. Take a look.
Story first published: Saturday, December 7, 2013, 12:49 [IST]
Desktop Bottom Promotion