ஈஸியான... சிக்கன் பட்டர் மசாலா

Posted By:
Subscribe to Boldsky

சிக்கன் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமான ஒன்று தான் சிக்கன் பட்டர் மசாலா. பொதுவாக இந்த ரெசிபியை ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இந்த சிக்கன் பட்டர் மசாலாவை வீட்டில் கூட செய்து சாப்பிடலாம். ஏன் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

ஏனெனில் அந்த அளவில் சிக்கன் பட்டர் மசாலாவானது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இங்கு அந்த சிக்கன் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Chicken Butter Masala: Homemade Recipe

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 100 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

தக்காளி - 4 (அரைத்தது)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

காய்ந்த வெந்தய இலை - 4 டேபிள் ஸ்பூன்

பிரஷ் க்ரீம் - 1 கப்ங

இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

சிக்கனானது பொன்னிறமானதும், அதில் வெண்ணெய் சேர்த்து பிரட்ட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, குறைவான தீயில் 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை கிளறி, பின் அதில் காய்ந்த வெந்தய இலை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து, இஞ்சி துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைத்து இறக்கினால், சிக்கன் பட்டர் மசாலா ரெடி!!!

English summary

Chicken Butter Masala: Homemade Recipe

Chicken butter masala recipe is one of the most famous ones in India. To prepare this Indian chicken recipe at home, read on..
Story first published: Wednesday, September 17, 2014, 12:24 [IST]
Subscribe Newsletter