தேங்காய் சேர்க்காத சூப்பரான சட்னி ரெசிபி... இந்த மாதிரி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்!

Posted By:

Pottukadalai Chutney Recipe in Tamil: ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன டிபன் செய்வதென்று யோசித்து செய்வதே பெரிய சவாலாக உள்ளதா? எப்போதும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை தான் செய்வீர்களா? அதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி செய்து போரத்துவிட்டதா?

இட்லி, தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி எவ்வளவு சுவையானதோ அதேயளவிற்கு செய்வதற்கு எளிமையானதும் கூட. தேங்காய் சட்னியை பொதுவாக தமிழ்நாட்டிலேயே மாவட்டத்திற்கு ஏற்ப வித்தியாசமாக செய்வோம். சில பகுதிகளில் தேங்காய் இல்லாமலேயே வித்தியாசமான தேங்காய் சட்னியை செய்வார்கள். இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரான தேங்காய் சட்னி செய்யலாம். இது செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு தேங்காய் சட்னி சுவையிலேயே இருக்கும்.

No Coconut Pottukadalai Chutney Recipe How to Make Pottukadalai Chutney

உங்களுக்கு தேங்காய் இல்லாமலேயே தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் இல்லாமலேயே செய்யக்கூடிய தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய்
- 3 பூண்டு பல்
- ¼ கப் பொட்டுக்கடலை
- புளி (சிறு நெல்லிக்காய் அளவு)
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்

தாளிக்க:

- 1 டீஸ்பூன் எண்ணெய்
- ¼ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும், அதேபோல மிளகாயையும் நன்கு வதக்க வேண்டும்.

- கலவை ஆறியதும், ஒரு மிக்சி ஜாரில் இந்த கலவையுடன் பொட்டுக்கடலை, சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

- பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, வழவழப்பான சட்னியாக அரைக்கவும். அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஓரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

- இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி நன்கு கிளறினால் சுவையான தேங்காய் இல்லாத தேங்காய் சட்னி ரெடி.

- இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 22, 2026, 20:57 [IST]
Desktop Bottom Promotion