Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
வீடே மணக்கும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நண்டு ரசம் ரெசிபி... எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கோங்க...!
மழைக்காலம் வந்ததும் அதனுடன் சேர்த்து நமக்கு சளி காய்ச்சல் இலவச இணைப்பாக வந்துவிடும். பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் சளி காய்ச்சலை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு விடுவார்கள். அதற்கு பெரும்பாலும் மருந்துகளை கொடுத்து தான் சரி செய்வோம். உடல் நலக்கோளாறுகள் வந்ததும் மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட வருவதற்கு முன்பே சிலவற்றை செய்து வரும்முன் காத்துக் கொள்ளலாம்.
சளி, காய்ச்சல் என்றாலே வீட்டில் பெரியவர்கள் கொடுப்பது ரசம் தான். அதே போல் நண்டு சூப் நல்ல ஆற்றலை கொடுக்கும். ஆனால் நண்டை வைத்து ரசம் வைத்தால் சுவை அற்புதமாக இருப்பதோடு உடல் வலுவையும் தரவல்லது. இந்த நண்டு ரசத்தை நண்டோடு சேர்த்து சூப் போலவும், சாதத்தோடு சேர்த்தும் சாப்பிடலாம். இங்கு நண்டு ரசத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- ஆற்று நண்டு - 5
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு - 6 பல்
- மிளகாய் - 5 அல்லது காரத்திற்கு ஏற்ப
- திப்பிலி - 4
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 ½ டீ ஸ்பூன்
- வால் மிளகு - ½ டீ ஸ்பூன்
- சோம்பு - ¼ ஸ்பூன்
- அன்னாசி பூ - 2
- கொத்தமல்லி விதை - ¼ ஸ்பூன்
- தக்காளி - 1
- சின்ன வெங்காயம் - 8-10
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- ஆற்று நண்டை நன்றாக சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து
கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, மிளகாய், திப்பிலி, மிளகு, சீரகம், வால் மிளகு,
அன்னாசி பூ, சோம்பு மற்றும் கொத்தமல்லி விதையை மிக்ஸி ஜாரில் சேர்த்து
நன்றாக அரைத்து கொள்ளவும்.
- தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை உரலில் சேர்த்து நன்றாக இடித்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலையை
சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
- பின் இடித்து வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து
வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து பச்சை வாசம்
போகும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் இடித்து வைத்த நண்டை சேர்த்து கிளறவும்.
- அதனுடன் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க
வைக்கவும். நன்றாக கொதித்ததும், கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால்
சுவையான நண்டு ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications











