Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
மட்டன் வாங்குனா.. ஒருவாட்டி மட்டன் திரக்கல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Mutton Therakkal Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய போகிறீர்களா? அப்படி வாங்கினால் எப்போதும் செய்வது போன்று மட்டன் செய்யாமல், ஒருமுறை மட்டன் திரக்கலை செய்யுங்கள். இந்த திரக்கலை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக இந்த மட்டன் திரக்கல் பார்க்க சுக்கா போன்று இருக்கும். ஆனால் சுவை வித்தியாசமாக இருக்கும். மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைப்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் திரக்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் திரக்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* மல்லி - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7
* சின்ன வெங்காயம் - 25 (நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 7 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டன் கழுவி குக்கரில் போட்டு, சிறிது உப்பு மற்றும் 1
டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை,
முந்திரி ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 6 சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மட்டன் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, நீர் வற்றும் வரை நன்கு
மட்டனை வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மட்டன்
திரக்கல் தயார்.



Click it and Unblock the Notifications











