Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கிராமத்து ஸ்டைலில் ஒருமுறை மட்டன் குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி இப்படி தான் செய்வீங்க..
Village Style Mutton Kulambu Recipe: விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்தவாறு சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மட்டன் வேக வைப்பதற்கு...
* மட்டன் - 3/4 கிலோ
* பூண்டு - 15 பல்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
குழம்பிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* வெங்காயம் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி
* முந்திரி - 10
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனை ஒரு குக்கரில் எடுத்து, அத்துடன் பூண்டு, பச்சை
மிளகாய், வெங்காயம், தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள்,
குழம்பு மிளகாய் தூள் மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து, மட்டன்
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி நன்கு கிளறி, அடுப்பில் வைத்து, குக்கரை
மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு மற்றும் சிறிது
நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னசிப்பூ சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும், இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து 2
நிமிடம் கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள மட்டனை மட்டும் எடுத்து
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மட்டன் வேக வைத்துள்ள நீரை ஊற்றி, நன்கு 10 நிமிடம்
மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம்
கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி
இறக்கினால், சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











