Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு.. இந்த பக்குவத்துல ஒருவாட்டி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்...
Mutton Sukka Recipe In Tamil: வார இறுதியில் தான் அனைவரும் வாய்க்கு ருசியாக எதையாவது சமைத்து சாப்பிடுவோம். அதுவும் நீங்கள் சமையல் பிரியர் என்றால், வித்தியாசமாக சமைத்து சாப்பிட விரும்பினால், மட்டனை வாங்கி சுக்கா செய்யுங்கள்.
அதுவும் சுக்காவிற்கு தனியாக மசாலாவை அரைத்து சமைத்து பாருங்கள். டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும். சொல்லப்போனால் இப்படி செய்யும் சுக்காவின் சுவை ஹோட்டலிலும் கிடைக்காது. முக்கியமாக இந்த சுக்கா செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மட்டன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
மசாலாவிற்கு...
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* அன்னாசிப்பூ - 1
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
சுக்காவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து வேக
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, சோம்பு,
சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம்
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வரமிளகாய் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை
அப்படியே நீருடன் ஊற்றி நன்கு 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* இறுதியாக அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
மூடி வைத்து 10 நிமிடம் பச்சை வாசனை போய், நீர் வற்றும் வரை வேக
வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மட்டன் சுக்கா
தயார்.



Click it and Unblock the Notifications











