முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..

Posted By:

Murungakkai Poricha Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு முருங்கைக்காய் பிடிக்குமா? முருங்கைக்காயை பெரும்பாலும் சாம்பார் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முருங்கைக்காயைக் கொண்டு பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பை சூடான சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். இந்த பக்குவத்தில் குழம்பு செய்யும் போது, சுவை வேற லெவலில் இருக்கும்.

Murungakkai Poricha Kuzhambu How To Make a Drumstick Curry

உங்களுக்கு இந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்காய் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
* புளி - சிறிது (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* அரைத்த தேங்காய் விழுது
* கொத்தமல்லி - சிறிது

தேங்காய் விழுதிற்கு..

* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து, குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து, காய் வெந்ததும், அதில் புளிச்சாற்றினை சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த விழுதை குழம்புடன் சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முருங்கைக்காய் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 13, 2026, 14:56 [IST]
Desktop Bottom Promotion