Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி சூப்பரான சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...!
Murungaikai Sadam Recipe in Tamil: முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டது, அனைத்து கடைகளிலும் முருங்கைக்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். முருங்கைக்காயை வைத்து பொதுவாக சாம்பார் அல்லது புளிகுழம்புதான் பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும், கொஞ்சம் நேரம் அதிகமாக இருந்தால் அதை வைத்து பொரியல் செய்வார்கள். இவற்றைத்தவிர முருங்கைக்காயை வைத்து எதுவும் செய்ய நாம் முயற்சிப்பதில்லை.
முருங்கைக்காயை வேகவைத்து சில சூப்பரான உணவுகளை சமைக்கலாம், அப்படி முருங்கைக்காயை வைத்து செய்யக்கூடிய உணவுகளில் ஒன்றுதான் முருங்கைக்காய் சாதம். இந்த முருங்கைக்காய் சாதத்தை சரியான நேரத்தில் செய்தால் பிரியாணியை விட சூப்பராக இருக்கும். இந்த முருங்கைக்காய் சாதம் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் சாதத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- முருங்கைக்காய் விழுது - 2 கப்
- பெரிய வெங்காயம் - 1
- தேங்காய்த் துருவல் - அரை கப்
- வர மிளகாய் - 5
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
- சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
- கடுகு - கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- அரிசியை நன்கு கழைந்து சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
- முருங்கைக்காய்களை வேக வைத்து அவற்றின் விழுதைத் தனியாக எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
- பின்னர் துருவிய தேங்காய் மற்றும் வர மிளகாயை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- நன்கு வதக்கிய வெங்கயாத்துடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அதில் முருங்கைக் காய் விழுது, அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- வதக்கிய விழுதில் சாதத்தைச் சேர்த்து நீர் வற்றும் வரை வேக விடவும்.
- மசாலா சாதத்துடன் நன்கு சேர்ந்ததும் அதில் கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை தூவி இறக்கிவிடவும்.
- சத்தான மற்றும் சுவையான முருங்கைக்காய் சாதம் ரெடி. தயிர்ப் பச்சடி அல்லது அப்பளத்துடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











