கத்தரிக்காயும், முருங்கைக்காயும் இருந்தா இப்படி செய்யுங்க.. குழம்பே தேவைப்படாது...

Posted By:

Murungaikai Kathirikai Thokku Recipe In Tamil: தினமும் மதியம் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், முருங்கைக்காயும் இருக்குதா?

அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த தொக்கு சாதத்துடன் பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது மதிய வேளையில் டக்கென்று செய்து முடிக்கும் வகையில் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

Murungaikai Kathirikai Thokku How To Make a Drumstick Brinjal Thokku Recipe

உங்களுக்கு கத்திரிக்காய் முருங்கைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முருங்கைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 12 பல்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கத்திரிக்காய் - 3
* முருங்கைக்காய் - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்

செய்முறை:

* முதலில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கிளறி விட்டு, நீர் அதிகம் இருந்தால், ஓரளவு வற்றும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் தொக்கு தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 27, 2024, 13:19 [IST]
Desktop Bottom Promotion