Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
தினமும் இந்த கீரையை இப்படி சாறு வைச்சு குடிங்க... உடல் எடை புயல் வேகத்துல குறையும்...!
Murungai Keerai Saaru Recipe in Tamil: முருங்கை கீரையில் இரும்பு சத்து மற்றும் பிற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் அதன் கசப்பு சுவையை குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களும் வெறுக்கிறார்கள்.
அதன் கசப்பு சுவையை குறைத்து அவர்களை சாப்பிட செய்வதோடு, வயிறு மற்றும் வாய் பகுதில் ஏற்படும் புண்ணிற்கு அருமருந்தாக செயல்படும் இதை முயற்சி செய்யுங்கள். சரி வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- முருங்கைக் கீரை - 2 கப்
- பாசி பருப்பு - ½ கப்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- பூண்டு - 5 பல்
- கருவேப்பிலை - கொத்து
- தேங்காய் - ¼ மூடி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் பாசிப்பருப்பை இரண்டு முறை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- உங்கள் விருப்பப்படி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சோம்பு சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.
- முருங்கை கீரையை உருவி குச்சிகள் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- முருங்கை கீரையில் படிந்திருக்கும் மண், தூசுகளை நீக்க பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் கீரையை கழுவி கைகளால் தனியே எடுத்து வைக்கவும்.
- கீரை வகைகளை தண்ணீரில் கழுவி வடித்தால், அதில் இருக்கும் மண், தூசிகள் தண்ணீரின் அடி பகுதியில் தங்கியிருக்கும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை தண்ணீரில் கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- அதில் கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பின் பூண்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் தக்காளி சேர்த்து வேக விட்டு, மஞ்சள்தூள் மற்றும் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- பருப்பு அரைப்பதம் வெந்ததும் கழுவி சுத்தம் செய்து வைத்த முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வேக விடவும்.
- கடைசியாக அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான முருங்கை கீரை தண்ணி சாறு ரெடி!



Click it and Unblock the Notifications
