Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு
உங்களுக்கு முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பை வீட்டில் செய்து சுவைக்க ஆசையா? அப்படியானால் கீழே முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உங்களுக்கு மதுரை ஸ்டைல் ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? மதுரையில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. இந்த ஹோட்டலில் உள்ளரெசிபிக்கள் அனைத்தும் தனித்துவமான சுவையுடனும், அற்புதமான மணத்துடனும் இருக்கும். அதில் பலரும் விரும்பும் ஓர் சிக்கன் ரெசிபி என்றால் அது முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு என்று சொல்லலாம்.

உங்களுக்கு முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பை வீட்டில் செய்து சுவைக்க ஆசையா? அப்படியானால் கீழே முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* வரமிளகாய் - 2
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 6
* மல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகுளைப் போட்டு, ஒரு 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கன் துண்டுகளானது வெள்ளை நிறத்தில் மாறும் போது, அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பிறகு தேங்காய் பால் மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் மூடி வைத்து பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு தயார்.
Image Courtesy: myediblecravings



Click it and Unblock the Notifications











